×

ஆட்டோ மோதி முதியவர் படுகாயம்

போடி, ஏப். 4: போடி ஜே.கே.பட்டி போஜ் பஜாரை சேர்ந்தவர் சுந்தரம் (56) கூலி வேலை செய்து வருகிறார். இவரது தெருவில் உள்ள வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொண் டாடுவதற்கு கொட்டகுடி ஆற்றிலிருந்து காவடி எடுத்து கொண்டு போடி சந்தை பேட்டை தெரு வழியாக வந்து கொண்டி ருந்தனர். அப்போது எதிரே அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று மோதியது. இதில் படுகாயமடைந்த சுந்தரத்தை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்து சுந்தரம் அளித்த புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

The post ஆட்டோ மோதி முதியவர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Sundaram ,JK Patti Bhoj Bazar ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...